யாழில் மாரடைப்பால் ஒருவர் மரணம்
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்பு
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன்.
இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றனர்.
மாரடைப்பு
பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார்.

பின்னர் சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த நபரின் சகோதரியான பெண் தான் கூறியது பொய் என்றும், நகையை மறைத்து வைத்ததாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam