கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை! முழு நாடும் சிரிப்பில்...
வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மக்கள் சிரித்து, என்னை கேலி செய்தனர்.
இலங்கை மக்களுக்கும் அவமானம்
சமீபத்தில் சர்வதேச மாநாடுகளுக்குச் சென்ற அமைச்சர்கள், முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கத் தவறியதால், நாட்டிற்காக சரியாகப் பேச முடியாமல் போனது.
இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது இருநூற்று நாற்பது இலட்சம் இலங்கை மக்களுக்கும் அவமானம் ஆகும்.
இருப்பினும், இந்த சூழ்நிலையைப் பார்த்து சிரிப்பதற்குப் பதிலாக அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலப் புலமையை வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்த போதிலும், ஆங்கிலத்தில் தனக்கிருக்கும் சிறப்பான புலமைக்காக பலராலும் கேலி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
