மகிந்தவின் செயலால் சீற்றமடைந்த நாமல்: வெளியான காரணம்
மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகிந்த மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற தகவலை விசாரிப்பதற்காக அவரை அவரின் மூத்த மகனான நாமல் தொடர்பு கொண்டுள்ளார்.
"தயவு செய்து அதற்கு முயற்சிக்க வேண்டாம். இனி அது உங்களுக்கு வேண்டாம். கௌரவமாக இருங்கள்" என்று மகிந்தவுக்கு நாமல் அறிவுரை வழங்கியுள்ளார்.
மகிந்தவுக்கு அழுத்தம்
கடந்த வருடம் மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.
இறுதியாக மகிந்தவின் மகன்களான நாமலையும் ரோகிதவையும் அழைத்து அவர்களின் ஊடாகத்தான் கோட்டா, மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதற்கமைய மகிந்தவுக்கு அவரின் மகன்கள், பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர். அதை மகிந்த ஏற்றிருந்தார்.
ஆனால், இடையில் புகுந்து குழப்பியது மகிந்தவின் சகாக்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்றவர்களே. எனினும், இறுதியில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த விரட்டியடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மகிந்த பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார் அவரின் மூத்த மகனான நாமல். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் நாமல் உள்ளார் என தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
