மகிந்த மீண்டும் பிரதமரா..! ரணில் கோபமடைந்ததாக தகவல்
மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது.
மீண்டும் பிரதமர் பதவி
அவர் மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று கதை பரவி வருகின்றது.
அவர் பதவி விலகிய தினமான மே 9ஆம் திகதி மீண்டும் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரித்துள்ள நிலையில் அவருக்குக் கோபம் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை விட்டுவிட்டு இருக்கின்ற வேலையைப் போய் பாருங்கள் என்று கூறியுள்ளார் ரணில் என்றும் குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |