போர்க்காலத்தில் இறந்தவர்களுக்காக பொதுத்தூபி! வரவேற்கும் மகிந்த
உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்பட வேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உயிரிழந்த அனைவரது நினைவாகவும் பொதுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
'போர்க்காலத்தில் இறந்தவர்களுக்காக பொதுத் தூபி அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை வரவேற்கின்றேன். இந்தப் பொதுத் தூபி இன நல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது.
அதேவேளை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |