அரசியலமைப்புச் சபை-கணக்காய்வாளர் நாயகம் பதவிகள்:அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு
அரசியலமைப்புச் சபை மற்றும் கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பான பிரச்சினை சில நாட்களில் தீர்க்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (20.01.2026) இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாததற்கு அரசியலமைப்பு சபையும் பொறுப்பேற்க வேண்டும்.
பொறுப்பு கூற வேண்டிய தரப்பு
இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். அரசியலமைப்புச் சபையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட பல கணக்காய்வாளர்களின் பெயர்களை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.இது சம்பந்தமாக, ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சபைக்கும் பொறுப்பு உள்ளது.

ஆனால் அரசியலமைப்புச் சபை மற்றும் கணக்காய்வாளர் நாயகம் தொடர்பான பிரச்சினைகள் சில நாட்களில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்க்கட்சித் தலைவரும் பொருத்தமான ஆதரவை வழங்கினால் நல்லது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரின் ஒப்புதலும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri