இலங்கையில் கணினி தொழில்நுட்ப அறிவு:வெளியான கணிப்பீடு
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கணினி தொழில்நுட்ப அறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கணினி தொழில்நுட்ப அறிவு 5 முதல் 69 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் சுயமாக கணனியைப் பயன்படுத்துபவர்களின் அளவு கணிப்பிடப்பட்டுள்ளது.
கணிப்பிடப்பட்டுள்ள வகுதிகள்
அதன்படி, நகர்ப்புறத்தில் 52.1 சதவீதத்துடன் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. கிராமப்புறங்களில் 36.6 சதவீதமும், பெருந்தோட்ட பகுதிகளில் 18.6 சதவீதமாக இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.
இதேபோல், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆண்களிடையே கணினி தொழில்நுட்ப அறிவு 39.9 சதவீதமாகவும், பெண்களிடையே 37.1 சதவீதமாகவும் உள்ளது.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருக்கிறது. 15 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் அனைத்து வயதினரிடையேயும் 75.6 சதவீதத்துடன் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளனர்.
ஆங்கில மொழி அறிவு பெற்றவர்களிடையே கணனி தொழில்நுட்ப அறிவு அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri