யாழில் பொங்கல் உண்ட ஜனாதிபதி அநுர.. நாங்கள் கேட்டது இதுதானா - சபையில் அர்ச்சுனா ஆதங்கம்
அண்மையில் பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அர்ச்சுனா இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, " அண்மையில் ஜனாதிபதி வடக்கிற்கு வந்து புக்கை (பொங்கல்) சாப்பிட்டு விட்டு சென்றிருக்கின்றார்.
ஆனந்த சுதாகரன்
நாங்கள் இத கேட்கவில்லை அவரிடம், நாங்கள் கேட்டது, வலி. வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாருங்கள்.

இந்திய சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துங்கள். இன்று வரைக்கும் தந்தையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்ற ஒரு 12 வயது குழந்தையினுடைய ஆசை,
ஆனந்த சுதாகரனினுடைய முகத்தை வெளியில் காட்டுங்கள் என்ற சின்ன சின்ன விடயங்களை தான் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இங்கே சிலர் புக்கை சமைத்துக் கொண்டிருக்கின்றனர், ஜனாதிபதிக்கு" என குறிப்பிட்டார்.