இலங்கைக் கடலில் சட்டவிரோதமாக நுழையவில்லை 'எக்ஸ் பிரஸ் பேர்ல்' - நாலக கொடஹேவா

Srilanka Ship Nalaka Godahewa M. V. X - Press
By Rakesh Jun 09, 2021 06:48 AM GMT
Report

'எக்ஸ் பிரஸ் பேர்ல்' கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கைக் கடற்பரப்பில் நுழையவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். 

அத்தோடு, மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"குறித்த கப்பல் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பல். தீப்பிடித்த இந்தக் கப்பல் சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும்.

மே 17ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்குப் பின்னர் வந்தது. இதில் 1,466 கொள்கலன்கள் இருந்தன. அதில் 513 கொள்கலன்கள் இலங்கையில் இறக்க வேண்டியவையாகும். ஆகவே, இது ஒரு இரகசியக் கப்பல் என எவரும் கூற முடியாது.

அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளானதை அறிந்து கொண்டவுடன் இலங்கைக் கடல் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலில் எதுவிதமான இரசாயனங்களும் கலக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

கடலில் கலக்கப்பட்ட கழிவுகளை நாம் முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எமது கடல் பரப்பை முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுவோம்.

அதேபோல் நட்டஈடு எடுக்கப்படும். ஆனால், அது உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. எனினும், இடைக்கால நட்டஈடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US