லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொதி - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
வடக்கு லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் மர்ம பொதி ஒன்றினால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு குவிந்த பொலிஸார் உடனடியாக பொது மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து அந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் குறித்த கட்டடத்தில் மர்ம பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் உட்பட அவசர உதவி பிரிவுகள் அனைத்தும் சம்பவ இடத்தை வந்தடைந்த நிலையில் பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த மக்களை உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
மர்ம பொதிக்குள் என்ன உள்ளதென இன்னமும் பொலிஸார் ஆராய்ந்து வரும் நிலையில் இதுவரையில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆராய்ந்த பின்னர் உடனடியாக தகவல் வழங்கப்படும் என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
