கதிர்காம ஆலயத்தின் பிரதான பூசகர் கைது
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்துக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட 38 பவுண் தங்கத் தட்டு காணாமல்போன விவகாரம் தொடர்பாக ஆலயத்தின் பிரதான பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தின் களஞ்சியத்துக்குப் பொறுப்பாளராகப் பதவி வகித்த சூட்டி என்ற பிரியந்த, சட்டத்தரணி ஊடாக கடந்த 19ஆம் திகதி சரணடைந்ததை அடுத்து, அவர் திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
பிரதான சந்தேகநபர்
இந்நிலையில், பிரதான சந்தேகநபரான கதிர்காமம் முருகன் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் இன்று (27.12.2023) சரணடைந்து, 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளைக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |