எனது காலத்தில் மக்கள் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்-மைத்திரிபால
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனது காலத்தில் சம்பளமும் அதிகம்
எனது ஆட்சிக்காலத்தில் பொருட்களின் விலைகளும் குறைவாக இருந்தன. சம்பளமும் அதிகம். மக்கள் கடவுளின் புண்ணியத்தில் சாப்பிட்டு, குடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். நாட்டில் இந்த சந்தர்ப்பத்தில் சர்வக்கட்சி அரசாங்கம் அமையாது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறந்த நிலைமையல்ல
இதனால், நான் மிகவும் முற்போக்கான கட்சிகளை இணைத்து கூட்டணி ஒன்றை அமைத்து மக்களுக்கு சார்பான அரசாங்கத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளேன். கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சிறந்த நிலைமையல்ல.
இதன் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எழுச்சி அதிகரிப்பது மாத்திரமே நடக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.