அரசாங்கம் சீனாவின் நட்பை இழந்து போகும் ஆபத்து! மைத்திரிபால எச்சரிக்கை
அரசாங்கம் சிந்தித்துச் செயலாற்றாது போனால் சீனாவின் நட்பை இழக்க வேண்டி வரும் என்று மைத்திரிபால சிரிசேன எச்சரித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஊடக நிலையமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அயலுறவுக் கொள்கையில் இருந்த தவறுகள்..
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
சீனாவின் யுவான் வான் -05 கப்பலை ஆரம்பத்தில் அனுமதித்த பின்னர் பிறகு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அரசாங்கம் பாரிய இழப்பை சந்திக்கவுள்ளது.
எனது ஆட்சிக்கு பின் பதவிக்கு வந்த அரசாங்கம் ஜப்பானின் நட்பை இழந்தது. அயலுறவுக் கொள்கையில் இருந்த தவறுகளே அதன் காரணம்.
இலங்கையைப் போன்ற நாடுகளைப் பொறுத்தமட்டில் அனைத்து நாடுகளும் முக்கியமானவை.
அதனை பதவிக்கு வரும் அரசாங்கங்கள் மறந்து விடக் கூடாது என்றும் மைத்திரிபால சிரிசேன தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்