பிரித்தானியாவின் சமய பன்முகத்தன்மையை பாதுகாப்பது எனது கடமை-அரசர் மூன்றாவது சார்லஸ்
பிரித்தானியாவில் இருக்கும் பல்வேறு சமயங்களின், சமயத் தலைவர்களை வரவேற்கும் வைபவம் பக்கிங்ஹாம் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.
லண்டன் பௌத்த விகாரையின் விகாராதிபதி போகொட சீலவிமல தேரர் உட்பட பல சமயங்களை சேர்ந்த சுமார் 30 சமய தலைவர்கள் வைபவத்தில் கலந்துக்கொண்டனர்.
சமய பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பது தனிப்பட்ட கடமை
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசர் மூன்றாது சார்லஸ், அரசர் என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் இங்கிலாந்து திருச்சபையின் தலைவராகவும் பிரித்தானியாவின் சமய பன்முகத்தன்மை மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பது தனது தனிப்பட்ட கடமை எனக் கூறியுள்ளார்.
அத்துடன் நமது நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது கடமையாகும், மதங்கள், கலாசாரங்கள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் மூலம் நம்பிக்கைக்கான இடத்தையும் அதன் நடைமுறையையும் பாதுகாப்பதன் மூலம் நமது இதயங்களும் மனங்களும் தனிநபர்களாக நம்மை வழிநடத்துகின்றன எனவும் கூறியுள்ளார்.
மேலும் “அனைத்து சமூகங்களிலும், அனைத்து நம்பிக்கைகளுக்காகவும், எனது முழு மனதுடன் அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அரசராக நான் உறுதியாக இருக்கிறேன்.”
@PA
பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகள் முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இறையாண்மையாகவும், தற்போது வாழும் உலகத்தைப் பிரதிபலிக்கும் விதமாகவும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான தனது உறுதியை அனைவரின் முன்னிலையிலும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அரசர் தெரிவித்துள்ளார்.
தான் சம்பிரதாயபூர்வ கிறிஸ்தவர் எனவும் கிறிஸ்தவர்களின் சமய நம்பிக்கையை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும் அரசர் மூன்றாவது சார்லஸ் மேலும் கூறியுள்ளார்.
@PA
இந்த வைபவத்தில், பல கிறிஸ்தவ சமயப் பிரிவுகளின் தலைவர்கள்,சீக்கிய, இந்து, பௌத்த, இஸ்லாம்,யூதம் உட்பட பல சமயங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.