மூதூர் - பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
மூதூர் - பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மூதூர் - பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத் தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 44 பேர் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அஞ்சலி
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளினாலும், பொதுமக்களினாலும் படுகொலை செய்யப்பட்டவர்களை புதைத்த இடத்தில், குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
படுகொலைச் சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 39 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் தமக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தற்போது இருக்கின்ற புதிய அரசின் ஆட்சியிலாவது தமக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1986ம் ஆண்டு யூலை மாதம் 16ம் திகதி அதிகாலை 03:00 மணியளவில் பாரதிபுரம், மல்லிகைத்தீவு, மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 02 பெண்கள் உட்பட 44 அப்பாவிப் பொதுமக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.







படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
