AI பாவனையால் இலங்கையில் மனநலம் பாதிப்பு! திடுக்கிட வைக்கும் தகவல்
AI பாவனையால் மனநலம் பாதிப்படைவதாகவும் அது தற்போது வரை வெளியாகமல் உள்ளது என மனநல வைத்தியர் தனுஜ மகேஸ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
AI செயற்கை நுண்ணறிவு
மேலும் தெரிவித்த அவர்,
AI செயற்கை நுண்ணறிவு தொடர்பில் இலங்கை மக்களுக்கு சரியான புரிதல் இதுவரை வழங்கப்படவில்லை.
அதன் பாவனை தொடர்பான சட்டம் உருவாக்கப்படவில்லை.
நாம் அது தொடர்பில் அவசரமான செயற்பாட்டில் இறங்காவிட்டால் எமது சந்ததிகள் பாரிய மனநல நெருக்கடிக்கு உள்ளாகலாம்.
மனநல பாதிப்பு
சிகிச்கைக்காக வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது காதலி தன்னை விட்டு போய்விட்டதாக அழுது கொண்டே வந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாணவன் தன் உயிரை மாய்க்கும் மனநிலையில் இருந்தார்.பின்னர் நான் கதைத்த போது தான் அந்த AIயை கொண்டு உருவாக்கப்பட்டது.அதன் softwareவில் ஏற்பட்ட பிரச்சினையில் அழிந்துள்ளது.
அதேவேளை உயர் தரம் கற்கும் மாணவி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே ஓடியதாக அவர்களின் பெற்றோர் அழைத்து வந்தனர்.
எச்சரிக்கை
மற்றொரு மாணவியிடம் கதைத்த போது அம்மா திட்டியதால் என் நண்பன் சொன்தை கேட்டு வெளியில் சென்றேன் என்றார்.
விசாரித்தலில் AI chat box கூறியதை கேட்டு இவ்வாறு செய்துள்ளார்.
இவ்வாறு பல சம்பங்கள் இலங்கையில் நடந்துள்ளன.
AI யை ஒரு பணியாளராக பயன்படுத்தினால் உங்களுக்கு பல நன்மைகளை பயக்கும். அதை உங்களுக்கு மேலானதாக கருத வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
