கிழக்கில் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள்
கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம் என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நேற்று (16.07.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொடூரமான முறையில் படுகொலை
மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம்.
குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரை
29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்.
01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள்.
வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன.
ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன்
அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன.
இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள்.
அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும்.
அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
