ஷாருக்கானின் இலங்கை விஜயம் இரத்து! வெளியாகியுள்ள அறிவிப்பு
இந்திய நடிகர் ஷாருக்கானின்(Shah Rukh Khan) இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த விடுதி தொகுப்பான City of Dreams Sri Lanka பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளவிருந்த ஷாருக்கானால்“திடீரென ஏற்பட்ட தனிப்பட்ட காரணங்களால்” பங்கேற்க முடியாது என அவரது முகவர் நிறுவனம் Wizcraft அறிவித்துள்ளது.
விஜயம் இரத்து
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த ஷாருக் கான், தனது வருகை சாத்தியமாகாத நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து, இலங்கை மக்களுக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர் பங்கேற்கவில்லை என்றாலும், நிகழ்வு முன்னமைக்கப்பட்டபடியே நடைபெறும் என உள்ளூர் மற்றும் உலகளாவிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு விழாவாகவே தொடரும் என ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
