இலங்கையின் மற்றுமொரு துறைக்கு அமெரிக்காவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
இலங்கை மீது அமெரிக்கா விதித்த 30 சதவீத இறக்குமதி வரி, இறப்பர் துறைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்துறைகளுக்கு தேவையான டயர்கள், கையுறைகள் மற்றும் இறப்பர் பொருட்களுக்கு இறப்பர் ஏற்றுமதித் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஹரின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
44 சதவீத வரியை 30 சதவீதமாக குறைப்பதற்கு முன்வைப்பதற்கு அமெரிக்க சந்தையில் இலங்கை தனது நிலையை முற்றிலுமாக இழப்பதை தடுத்துள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு போட்டித்தன்மை
எனினும், 30 சதவீத வரி என்பது ஏற்றுமதியாளர்களுக்கு போட்டித்தன்மையை பேணக்கூடிய ஒரு நிலையான தீர்வாகாது என தலைவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறப்பர் ஏற்றுமதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க சந்தையிலிருந்து பெறப்பட்டது. இறப்பர் தொழிலுக்கு மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆடை தொழில்துறை
30 சதவீத வரி ஆயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு இறப்பர் விவசாயிகளை உடனடியாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பானது இலங்கையை ஆடை தொழில்துறையை வெகுவாக பாதிக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.