தென்னிலங்கையில் வீடொன்றில் பரபரப்பை ஏற்படுத்திய மனித கால்
தென்னிலங்கையில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித கால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் உடற்பாகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மோதல் நிலைமை
குறித்த நபர் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன நபரின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அவரின் வீட்டின் பின்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடத்தியிருந்தனர்.
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கணவனுக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி மோதல் நிலைமை ஏற்படுத்தாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அட நடிகர் சந்தானம் மகனா இது, சூர்யாவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ... நல்லா வளர்ந்துட்டாரே... Cineulagam
