விக்னேஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டு மனம்மாறிய பெரும்பான்மையின இளைஞன்
என்னை கொலை செய்ய வெறியில் இருந்த பெரும்பான்மையின இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
“சேர்.. உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன்.
என்றாலும் நீங்கள் குறிப்பிட்ட பேராசிரியர் ஆரியரட்ணவின் சிங்கள நூலான “தெமள
பௌத்தயா”வை (தமிழ் பௌத்தர்கள்) வாசித்த பின்னர்தான் உங்கள் கூற்றுக்களின்
உண்மையைப் புரிந்து கொண்டேன். உங்களை வந்து சந்திக்க விரும்புகின்றேன்.” என இளைஞன் கூறியுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
அரசியல் பிரச்சினை
காலம் எமக்கு ஒரு முக்கிய பாடத்தைப் புகட்டியுள்ளது.
இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு பெரும்பான்மையின தலைவர்களின் இன ரீதியான அரசாங்கம் (Ethnocracy) மட்டும் காரணமல்ல.
பெரும்பான்மையின மக்களுடன் நாம் அவர்கள் மொழியில் பேசி எமது குறைகளை எடுத்துரையாமையும் ஒரு காரணமாகும்.
பெரும்பான்மையின மக்களுக்கு அவர்களின் வரலாறு, தமிழர்கள் பற்றிய வரலாறு, தொல்பொருட்கள் பற்றிய விளக்கங்கள், சுதந்திரப் போராட்டங்களில் தமிழ்த் தலைவர்களுடைய பங்கு போன்ற பலதும் மறைக்கப்பட்டு வருகின்றன.
எமது பிரச்சனைகள், குறைகள், எமது அபிலாலைகள், எதிர்பார்ப்புக்கள் போன்றவை சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை.” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |