கொழும்பில் பல்கலை மாணவர்களின் போராட்டத்தில் பதற்றம்! ஊடகவியலாளர் உள்ளிட்ட பலர் மீது தாக்குதல்
புதிய இணைப்பு
பல்கலைக்கழக வளாகமானது போராட்டக் களமாக காணப்படுவதாகவும், பொலிஸார் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் எதிர்ப்பிற்கு மத்தியில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸாரால் தொடர் கண்ணீர்ப்புகை தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, லங்காசிறி மற்றும் ககன ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் தற்சமயம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் 45’ கீழே தாழ்த்தி கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தியுள்ளனர்
இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பேராசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும், வரிகளை நீக்குமாறும், மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த போராட்டமானது இன்று(17.01.2024) ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
நூற்றுக்கணக்காண பொலிஸார்
இதன் போது ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்க்கு நூற்றுக்கணக்காண பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




















தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
