இணையப்பாதுகாப்பு சட்டம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
இணையப்பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இந்த சட்டமூலம் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த சட்டம் குறித்த பங்குதாரர்களுடன் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகத்தில் பரவும் பிழையான தகவல்
இந்த சட்டம் மிகவும் ஆபத்தானது எனவும், அரசாங்கம் அவசர அவசரமாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் பிழையான தகவல்களை வெளியிடுவோரை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கக்கூடிய வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எனினும் இந்த சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர் எனவும், இந்த சட்டத்தை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த சட்டம் தொடர்பிலான விவாதம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
