வட்டிப்பண முரண்பாட்டால் குடும்ப பெண் கொலை
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்ப பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (4 ) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
மேற்படி பெண்ணின் கணவர் நேற்று கூலி வேலைக்கு சென்ற நிலையில், மூன்று பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த தாயாரான 46 வயது பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் பெண்ணுடன் முரண்பட்டு கத்தியால் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதன்போது உயிருக்கு போராடிய குறித்த பெண்ணை அயலவர்கள் உடனே வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.