அக்குரேகொடவில் இரட்டைக்கொலை! மேலும் நால்வர் கைது
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டைகொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவருக்கு போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுத்ததாக சந்தேகிக்கப்படுபவர்களே காலி, கஹதுவ பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையை நெறிப்படுத்தியுள்ள நபர்
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே கைது சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 'கரந்தெனிய சுத்தாவின் ஆலோசனையின் பேரில் டுபாய் நிபுண மற்றும் மல்வானை டுடூ (Tutu) ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri