அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கரந்தெனிய சுத்தாவினால் நடத்தப்பட்ட அனைத்து கொலைகளிலும் முக்கிய துப்பாக்கித்தாரி ரூபஸ் சுரேஷ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்
தலங்கம, அக்குரேகொட இரட்டைக்கொலையின் சந்தேகநபர்கள் கொலைக்கு T-56 துப்பாக்கி மற்றும் ரிவால்வரைப் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி கபுஹேன - உனகுருவ பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு தம்பதியினரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் இந்த துப்பாக்கித்தாரி ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அத்தனகல்ல - மீவல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளின் போது, கொலைக்கு முந்தைய நாள், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்த, மல்வானே டுட்டு, மோதரா நிபுனா மற்றும் கோண்டா ரஞ்சி ஆகியோர் வாட்ஸ்அப் மூலம் அவருக்கு குழு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்தது.
வாட்ஸ்அப்பில் அழைத்து தகவல் விசாரித்த நபர்
கொலை நடந்த தினம் மாலையில், கரந்தெனிய சுத்தா மற்றும் மல்வானே டுட்டு ஆகியோர் இரண்டு சந்தர்ப்பங்களில் வாட்ஸ்அப்பில் அழைத்து தகவல் விசாரித்துள்ளனர்.
இதற்கிடையில், கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் முன் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்து துப்பாக்கியை ஒப்படைப்பது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, சிவப்பு முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அக்குரேகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேகநபரின் தற்போதைய தோற்றத்தைக் காட்டும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri