வெற்றிப்பாதையில் மும்பை இந்தியன்ஸ் அணி
வெற்றிப்பாதையில் மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 33ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(17) நடைபெற்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ஓட்டங்களும், கிளாசன் 28 பந்தில் 37 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி
இதையடுத்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.
ரோகித் சர்மா 26 ஓட்டங்களும், ரிக்கல்டன் 31 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வில் ஜாக்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி தனது 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
