ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி! புள்ளிபட்டியலின் தற்போதைய நிலவரம்
ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா
ஐதராபாத் அணி
ஐதராபாத்தின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க 6ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் பொறுப்புடன் விளையாடினார்கள்.
கிளாசன் அரை சதம் கடந்து 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஐ.பி.எல். தொடரின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அபினவ் 43 ஓட்டங்களில் வெளியேறினார். மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை அணி
இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
ரியான் ரிக்கல்டன் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டகளை எடுத்து அபார வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டகளை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும், ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
புள்ளிப்பட்டியல்
இந்த வெற்றியின் மூலம், மும்பை அணி தற்போது 10 புள்ளிகளை பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
குஜராத் அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, இரண்டு தோல்வி என 12 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.
குஜராத்தின் நிகர ஓட்டவிகிதம் 1.10 என்று அளவில் இருக்கிறது. டெல்லி அணியும் 12 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
டெல்லியின் நிகர ஓட்டவிகிதம் 0.65 என்ற அளவில் இருக்கின்றது. மும்பை அணி தற்போது ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 வெற்றி நான்கு தோல்விய என 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.மும்பை அணியின் நிகர ஓட்டவிகிதம் 0.67 என்ற அளவில் உள்ளது.
சிஎஸ்கே
நான்காவது இடத்தில் ஆர்சிபி இருக்கிறது. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியும் மூன்று தோல்வி என 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி நிகர ஓட்டவிகிதம் 0.47 என்ற அளவில் இருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவை தவிர அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் மும்பை, ஆர் சி பி அணிகள் இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும்.
பஞ்சாப் அணி 10 புள்ளிகள் உடன் 0.17 நிகர ஓட்டவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும், லக்னோ அணி 10 புள்ளிகள் உடன் மைனஸ் 0.05 என்ற நிகர ஓட்டவிகிதத்துடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.
கொல்கத்தா அணி 6 புள்ளிகள் உடன் 0.21 என்ற நிகர ஓட்டவிகிதத்துடன் ஏழாம் இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் முறையே 8,9,10 ஆகிய இடத்தில் தலா 4 புள்ளிகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
