ஐபிஎல்லில் 14 வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனை! பேசுபொருளாகியுள்ள கண்ணீர் விட்ட புகைப்படம்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி(Suriyavansi) படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 36ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர்
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்(RR)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பில் வைபவ் சூர்யவன்ஷி என்ற வீரர் இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
முதல் பந்திலேயே சிக்சர்
அத்துடன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
Halla Bol from Ball One! 🔥💗 pic.twitter.com/iH5r2yR1x9
— Rajasthan Royals (@rajasthanroyals) April 19, 2025
இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ஓட்டங்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் அழுதவாறே பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உட்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ரோயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.