சம்பூர் கைது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Mullivaikal Remembrance Day
By Rakesh May 16, 2024 09:45 PM GMT
Report

தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் மிகவும் சிக்கலான நிலை எழுந்திருந்ததை பலரும் விவாதித்திருந்தனர்.

சம்பூர் கைது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் | Mullivaikkal Remembrance Ranil Speech

இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகே சம்பூர் கைது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி ரணிலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நேரில் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இந்த கைது தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிக்கல் நிலைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியிருந்ததையடுத்து அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்த ஜனாதிபதி இது தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் துரித நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சம்பூர் கைது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் | Mullivaikkal Remembrance Ranil Speech

குறிப்பாக மே18 வரையில் தமிழர் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகளில் பொலிஸார் சுமுகமான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்றையதினம் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் கலந்துரையாடியதுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது உள்ள நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனிடம் நேற்று மாலை கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முதலாம் இணைப்பு

மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள்.

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தேகநபரை சுற்றிவளைத்த என்ஐஏ அமைப்பு

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தேகநபரை சுற்றிவளைத்த என்ஐஏ அமைப்பு

பொலிஸ் கெடுபிடி

அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் கைது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் | Mullivaikkal Remembrance Ranil Speech

இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,

‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார்.

"உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்த கும்பல்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

தென்னிலங்கையில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்த கும்பல்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து

“இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

சம்பூர் கைது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம் பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் | Mullivaikkal Remembrance Ranil Speech

அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி இந்த மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம்

ஜனாதிபதி இந்த மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US