தென்னிலங்கையில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்த கும்பல்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்து வீடு திரும்பிய மாணவி ஒருவரை கடத்த முற்பட்டதாககூறப்படும் வான் மற்றும் நான்கு இளைஞர்களை ஆலதெனிய பொலிஸார்(கம்பஹா) கைது செய்துள்ளனர்.
பரீட்சையின் இறுதி வினாத்தாளுக்கு விடையளித்துவிட்டு நேற்று வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியே மேற்படி சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இதன்போது மாணவியுடன் இருந்த மேலும் இரு பாடசாலை மாணவர்கள் அதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.
அவசர அழைப்பு
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது விரைந்து செயல்பட்ட ஆலதெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வானை துரத்திச் சென்று சந்தேக நபர்களையும் அவர்கள் வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ பகுதியிலுள்ள பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி - நாகஸ்தென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இரு மாணவிகளும் நண்பிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |