ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால் மண்
தமிழீழத் தாயகம் கோரிய உரிமை யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.
மிகக் கோரமான அந்த இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுறும் போது அங்கு சித்திரவதைகள் அனுபவித்து மாண்டனர் பலர்.
இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தன்னுடைய உறவுகளை எண்ணி கண்ணீர் விட்டு கதறி தமது அஞ்சலிகளை இன்று செலுத்தி வருகின்றனர்.
முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிக்கு அருகில் திரண்டுள்ள மக்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் விட்டு கதறும் உணர்வுபூர்வமான தருணங்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறி வருகின்றது.
அந்தவகையிலே முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
அதனையடுத்து, முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே தன்னுடைய கணவனை இழந்த முள்ளியவளையை சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விசேடமாக 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்திற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard அவர்கள் வருகை தந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் - ஷான், ராகேஷ்


































புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
