இறுதி யுத்தத்தின் பேரவலத்தினை தாங்கி நிற்கும் நந்திக்கடல்! உணர்வுபூர்வ அஞ்சலி ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18.05.2024) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடலில் அஞ்சலி
குறித்த அஞ்சலியின் பின்னர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை
உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு வேண்டும்: அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
You may like this video

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
