முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தியை மறித்த பொலிஸாரால் ஏற்பட்ட குழப்பநிலை
கிளிநொச்சியில் (kilinochchi) இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை புதுக்குடியிருப்பு பொலிஸார் இடை நடுவில் மறித்து சில்லறை சாட்டுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தி சுமந்தபடி, ஊர்தி, முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு பொலிஸார் இடையில் மறைத்து குறித்த ஊர்தியை சோதனையிட்டுள்ளனர்.
அதன் பின்னர், சாரதியிடம் உழவு இயந்திரத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி குறித்த ஆவணங்களை தொலைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
குழப்பநிலை
மேலும், குறித்த ஊர்தியை, பொலிஸார் நீண்ட நேரமாக வழிமறித்து பின் செல்லுமாறு அனுமதித்துள்ளதால் சற்று நிமிடம் அந்த இடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
