கிறிஸ்டி குகராஜாவின் 24ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (Photos)
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) நினைவுதினம் இன்று (15.05.2023) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்ரி குகராஜா வவுனியாவில் நீண்டகாலமாகத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த நிலையில், 1999ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது 24ஆம் ஆண்டு நினைவுதினம் வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக இன்று நடைபெற்றுள்ளது.
மலர் தூவி அஞ்சலி
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் புருஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
