தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..!

Sri Lankan Tamils Trincomalee Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Sri Lanka Government
By Kiyas Shafe May 13, 2026 06:21 AM GMT
Report

ஈழப்போர் இறுதிக்கட்டத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, திருகோணமலை - பாட்டாளிபுரம் பகுதியில் நேற்று(12.05.2026) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதிரடியாக தனது பலத்தை சட்டசபையில் உறுதிப்படுத்தியது தவெக

அதிரடியாக தனது பலத்தை சட்டசபையில் உறுதிப்படுத்தியது தவெக

17ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், போரில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மலர் தூவி தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். ​

போர்க்காலத்தின் போது உணவின்றித் தவித்த மக்களின் பசி போக்கிய அடையாளமாகவும், அந்தத் துயரத்தின் சாட்சியாகவும் விளங்கும் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டுள்ளது. ​

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடைகளும், கெடுபிடிகளும் நிலவி வரும் சூழலிலும், திருகோணமலை பாட்டாளிபுரத்தில் எந்தவித சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக இந்த அஞ்சலி நிகழ்வு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை

அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை

வட்டிக்குப் பணம் கொடுப்பவரே காலியில் சுட்டுப் படுகொலை! துப்பாக்கிதாரிகளைத் தேடி வலைவீச்சு

வட்டிக்குப் பணம் கொடுப்பவரே காலியில் சுட்டுப் படுகொலை! துப்பாக்கிதாரிகளைத் தேடி வலைவீச்சு

வவுனியா - திருநாவற்குளம்

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட விவசாய கல்லூரி மாணவர்களின் நினைவேந்தலும் முள்ளிவாய்ககால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா - திருநாவற்குளம், 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முள்ளிவாய்கால் பகுதியில் மரணித்தவர்கள் ஆகியோருக்கும் இதன்போது உணர்வு பூர்வமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி

நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

இதன்போது போர்க்காலத்தின் வலிகளையும் பட்டினியையும் நினைவூட்டும் குறியீடாக அமைந்த 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சியிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலதிக தகவல் - திலிபன் 

கொக்கட்டிச்சோலை 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, 'தமிழின அழிப்பு நாள்' நேற்று(12.05.2026) கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை உணர்வு பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொட்டும் மழையிலும் அஞ்சலி

இதன்போது, மழையையும் பொருட்படுத்தாது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கால சந்ததியினருக்கும் கடந்த 17 வருடத்துக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் விளங்கப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் எதிர்வரும் மே 18ஆம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல் - பவண்

அம்பாறை

தமிழின அழிப்பின் அடையாளமாக பார்க்கப்படும் முள்ளிவாய்க்கால் கோர சம்பவத்திற்கு 17ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வாரத்தின் மூன்றாவது நாளாக நடக்கும் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“மே 18” என எழுதப்பட்ட சிரட்டையில் கஞ்சி பகிர்வு

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு “மே 18” என எழுதப்பட்ட சிரட்டையில் வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக தகவல் - சிஹான் பாரூக்

நாவிதன்வெளி  பிரதேச சபை

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று(13.05.2026) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 11வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபையிலும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

கூட்டத்தின் போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்த தவிசாளர், பிரதேசத்தின் கல்வி மேம்பாடு குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்.

இதன்படி, எமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன சமூக நிலையங்கள் ஊடாக நூலகங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அவை இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் சேவை மனப்பாங்குடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலதிக தகவல் - சிஹான் பாரூக்  

யாழ்ப்பாணம் 

இறுதி யுத்தத்தில் குடித்து உயிர்வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் குருநகரில் இன்று(13.05.2026) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவுத்தூபியின் முன்பாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது குருநகர் பங்குத்தந்தை றொக்ஸ்,பாடசாலை சிறுவர்கள், கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்கால் கஞ்சியை குடித்து இறுதி யுத்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

மேலதிக தகவல் - தீபன்

வடமராட்சி மந்திகை சந்தை பகுதி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று(13.05.2026) வடமராட்சி மந்திகை சந்தை பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க, மலர் அஞ்சலியினை சோமஸ்கந்த குருக்கள் தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைக்க மக்களால் மெழுகு வர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், மற அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

மேலதிக தகவல் - எறிமலை

மட்டக்களப்பு - கல்குடா

முள்ளவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாவது நாளாக பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, மட்டக்களப்பு - கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காய் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

முதலில் கறுவாக்கேணி முச்சந்தி பிள்ளையாருக்கு பூஜை நடைபெற்று, அதன் பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இந்த முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் சைவக்குருமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.   

மேலதிக தகவல் -  ருசாத்

கிளிநொச்சி 

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வழங்கப்பட்டது.

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..! | Mullivaikkal Memorial Day Third Day

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்றொருநாளில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது உறவுகள் கொத்து கொத்தாக செத்து மடிந்த நாளினை நினைவு கூறும் வகையிலும் அன்று கஞ்சி தான் நமது எஞ்சியவர்களை காத்தது என்பதை நினைவுகூர் வகையிலும் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது. 

மேலதிக தகவல் - தேவந்தன்

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US