முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (18.05.2025) ஆகும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதிக் காட்சி
தொடர்ந்து துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
