தோண்டத் தோண்ட வெளிப்பட்ட எலும்புக்கூடுகள் : முள்ளிவாய்க்காலின் உண்மைச் சாட்சிகள்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
16 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் இந்நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஒரு நினைவேந்தலாகும்.
குறிப்பாக கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தூபியுடன் இடம்பெற்றாலும் எமது தாயகத்தில் அது முற்று முழுதாக எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் இடம்பெறுகின்றது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவின் பிரம்டன் நகரில் நிறுவப்பட்ட நினைவுத்தூபி குறித்து இலங்கை அரசாங்கம் மாறுபாடான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இலங்கையில் இனப்படுகொலை ஒன்று நிகழ்த்தப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் கனடாவில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு கண்டனத்தையும் இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க அங்கு தமக்கு நிகழ்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் கோர முகம் குறித்து மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
