பூவரசங்குளம் ஏற்று நீர்பாசன திட்டம் விவசாயிகள் பாவனைக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி உதவியில் மாந்தை கிழக்கு பூவசரங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராயா திறந்து வைத்துள்ளார்.
145 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 145 ஏக்கர் விவசாய நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் பூவரசங்குளத்தில் இருக்கும் நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றும் செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு.சந்தைப்படுத்தல் பிரச்சினயினை எதிர்கொண்டுவரும் விவசாயிகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஆளுனரின் பிரதம செயலாளர் சமன் பண்டுலசேணா, நவீனமயமாக்கல் செயத்திட்டதிட்ட பிரதி திட்ட பணிப்பாளர் கே.பத்மநாதன், வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் வீ.பிறேம்குமார் மாகாண பிரதி பிரதம செயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் அதிகாரிகள் மற்றும் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர்கள், தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
