முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்தின் நடவடிக்கை : அநுர அரசின் கவனத்திற்கு
முல்லைத்தீவில் கிராம அலுவலர், காணிபகுதி உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கருவேலங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் காணிக்காக பிரதேச மட்டம், மற்றும் மாவட்ட மட்ட காணி பயன்பாட்டுக் குழுவில் 2 ஏக்கர் கணி வழங்குவதாக அனுமதிக்கப்பட்ட தீர்வினை பக்கச்சார்பாக நடைமுறைப்படுத்தியதாக குறித்த உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் பகுதியில் 1968 ஆம் ஆண்டு மயில்வாகனம் தம்பு என்பவரால் பிள்ளையார் ஆலயம் வைக்கப்பட்டு வழிபட்டு பரம்பரை கோயிலாக வழிபட்டு வந்துள்ளனர்.
புதிய நிர்வாகம்
காலப்போக்கில் 2005 ஆம் ஆண்டளவில் பொது மக்களின் கோயிலாக பதிவு செய்யப்பட்டு அரசாங்க நிதி உதவித்திட்டம் பெறப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள 6 ஏக்கர் 28 பேரைச் அறுதி உறுதி தனியார் காணியாக காணப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு அறுதி உறுதி காணியின் உரித்துடைய முத்துக்குமாரசூரியர் நகுலசூரியர் என்பவர் வெளிநாட்டில் இருந்து வந்து கோவில் அமைந்துள்ள 2 ஏக்கர் காணியினை பிடித்து வரைபடம் வரைந்து பிரதேச செயலகத்திற்கு அந்த காணியினை தனக்கு உரித்தாகும் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
முத்துக்குமாரசூரியர் நகுலசூரியர் என்பவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஆலயத்திற்கு உரிய 2 ஏக்கர்காணியினை ஆலய நன்மை கருதி அவ்ஆலயத்திற்கே வழங்ககோரி பிரதேச மட்டம், மற்றும் மாவட்ட காணிப்பயன்பாட்டுக் குழுக்கூட்டதிலும் குறித்த காணியை ஆலயத்திற்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தனிநபர் ஒருவர் குறித்த காணியை விலையாக வாங்கியதன் பின் ஒரு ஏக்கர் வரையிலான கோவில் காணியினை அபகரித்து வயல் செய்துவருகின்றார்.பழைய நிர்வாகத்தினை கலைத்துவிட்டு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கோவிலின் அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துவிட்ட
நிலையில் பழைய நிர்வாகத்தினை கலைப்பதற்கான காரணம் காணியினை அபகரிப்பதற்கு என
திட்டமிடப்பட்டுள்ளது இந்த திட்டமிடலுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயல
காணிப்பகுதி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலரும் உடந்தையாக இருக்கின்றனர்.
பணத்தினை கொடுத்து கோயிலினை கட்டும் பழைய நிர்வாக உறுப்பினர்கள் இந்த காணிப்பிணக்கினை கேட்டபோது அவர்களின் கருத்தினை ஏற்க மறுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தனிநபர் ஒருவருக்கு காணி அபகரிப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றமை வெளிவந்துள்ளது.
காணிப்பிணக்கு தீர்வு
தனியார் காணிக்கு கிழக்கு பக்கமாக கருவேல் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான 6 ஏக்கர் 28 பேர்ச் காணி உள்ளது. அந்த காணியினையே தற்போது அங்குள்ள தொழிலதிபரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான நபர் விலைக்கு வாங்கிவிட்டு கருவேலன் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான காணியினையும் அபகரித்து வயல் செய்துவருகின்றார்.
இரு காணிகளின் பழைய எல்லைகளை கண்டு மீள் பார்வை செய்தால் இந்த காணிப்பிணக்கு தீர்விற்கு வரும் இதனைத்தான் இந்த ஆலயத்தின் பழைய நிர்வாகம் கோரிவருகின்றது.
கோவில் காணிக்கு அருகில் உள்ள தனியாரின் காணியினை கடந்த ஆண்டு இறுதியில் தனிநபர் விலைக்கு வாங்கிய போது இவர் ஆலயத்தின்தலைவர்பதவியை வகித்திருந்தார் சுமார் 150 வொளிநாட்டு அங்கத்தவர்களைஉள்ளடங்கிய இவ் ஆலயநிர்வாகத்திற்கு தெரிவிக்காது ரகசியமான முறையில் காணிப்பரிமாற்றம் ஏற்பட்டது அன்றைய நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அவரின் உறவினர்கள்தான் ஆலயத்தின் புதிய நிர்வாகத்தின் உள்வாங்கப்பட்டு புதிய நிர்வாகத்தினர் கோவிலுக்கு காணிபோதும் மீதி காணி தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு புதிய நிர்வாகம் காணபடுகின்றது.
பக்கச்சார்பான நடவடிக்கை
அத்துடன் இக் கோவிலின் முன்னாள் போசகர் முறையிட்ட போது கோவிலுக்கு 2ஏக்கர் காணி தேவையற்றது என மாவட்ட செயலக அதிகாரி ஒருவரும் தெரிவிக்கின்றார்.இதற்கு முற்றுமுழுதாக ஒட்டுசுடுட்டான் பிரதேச செயலகத்தின் பக்கச்சார்பான நடவடிக்கை என்பது வெளிப்பட்டுள்ளது.
இந்த காணிப்பிணக்கில் அரச அதிகாரிகள் முறைகேடாக செயற்பட்ட விதம் மற்றும் அரச காணியினை தனிநபர் அபகரிப்பதற்கு உடந்தையாக இருந்த உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என பழைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்கள் தற்போதைய அநுர குமார(Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகளின் பக்கச்சார்பான நடவடிக்கை மற்றும் காணிப்பகுதி உத்தியோகத்தர்களின் நடவடிக்கையினால் அதிகளவான மக்ககள் காணிப்பிணக்கிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
வடமாகாணத்தில் அதிகளவான காணிப்பிணக்குகள் காணப்படும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது இந்த நிலையினை புதிய அரசாங்கம் மாற்றி அமைக்கவேண்டும் என்பது மக்கள் நலன் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Yathu அவரால் எழுதப்பட்டு, 11 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.