முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆளணி பற்றாக்குறை: விடுக்கப்படும் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் கண்காணிப்பு மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நீர்பாசன திணைக்களத்திடம் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
முத்தையன் கட்டு நீர்பாசனத்தின் கீழ் 8 குளங்களும், வவுனிக்குளம் நீர்பாசனத்தின் கீழ் 12 குளங்களுமாக மொத்தம் 20 பெரிய மற்றும் நடுத்தர குளங்கள் மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை மேற்கொண்டு பராமரிப்பு மற்றும் அலுவலக வேலைகளுக்கான ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக மாவட்ட விவசாய குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன வசதி
வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் குறிக்கோளானது நீடித்திருக்ககூடிய நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தியும் வெள்ளத்தடுப்பினையும், கழிவு வாய்க்கால்களையும், உப்புநீர் தடுப்பு அணைகளையும் புனரமைத்தும், மாகாணத்திலுள்ள ஆற்று நீர் படுக்கைகளைப் பராமரித்தும் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தலே திணைக்களத்தின் குறிக்கோளாக காணப்படுகின்றது.
இவற்றினை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளணி பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வவுனிக்குளத்தில் 14 முத்தையன்கட்டில் 14 பேருமாக 28 பேர் இருக்கவேண்டிய இடத்தில் வவுனிக்குளத்தில் 8பேரும் முத்தையன்கட்டில் 8 பேரும் உள்ளனர்.
பராமரிப்பு உத்தியோகத்தர்கள் வவுனிக்குளத்திற்கு 30 பேரும், முத்தையன்கட்டுகுளத்திற்கு 32 பேரும் தேவையாக உள்ளது.
பராமரிப்பு நிர்வாக வேலை
ஆனால் தற்போது வவுனிக்குளத்தில் 11 பேரும் முத்தையன்கட்டில் 13 பேருமாக 24 பேர் உள்ளனர். 62 பேர் இருக்கவேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறு அரைபங்கு பணியாளர்களை வைத்துக்கொண்டு 20 குளங்ஙகளையும் இரவு பகல் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு நிர்வாக வேலைகளை செய்வது என்பது இலகுவான விடையமல்ல எனவே இவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |