எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பண்டிகை காலத்தில் எரிபொருளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உடன்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகச்சங்கத்தின் இணைச்செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.
லங்கா ஐஓசி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு
இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் தடையின்றிய மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
