முல்லைத்தீவில் யுவதி கடத்தல் விவகாரம்: 6 சந்தேகநபர்கள் கைது
முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட யுவதியொருவர், விடுதியொன்றில் வைத்து இளைஞனுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார்
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதற்கட்டமாக கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதோடு யுவதி தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் போது யுவதி, இளைஞரொருவருடன் திருகோணமலையில் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
இந்த சம்பவத்தில் மொத்தமாக 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த யுவதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
