பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச்சென்று குழந்தையை பிரசவித்த நாடாளுமன்ற உறுப்பினர்
நியூசிலாந்தில் பிரசவ வலியுடன் சைக்கிளில் சென்று குழந்தை பெற்றெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் 41 வயதான ஜூலி அனே ஜெண்டருக்கு (Julie Anne Genter) நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் தமது சைக்கிளில் பயணித்து மருத்துவமனையை சென்றடைந்தார்.
அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் குழந்தை பெற்றவுடன் அதில் தமது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்டிச்செல்ல உண்மையிலேயே தாம் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று மருத்துவமனையில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

