ஜகத் விதான எம்பியின் புதல்வருக்கு விளக்கமறியல் உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் புதல்வரை எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனமொன்றை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் புதல்வர் ரசிக விதான நேற்றைய தினம்(19) மதுகம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
விளக்கமறியல் உத்தரவு
பாணந்துறை மோசடித்தடுப்புப்பிரிவின் பொலிஸார் அவரைக் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம்(20) ரசிக விதான மதுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது அவரை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அசங்கா ஹெட்டியாவத்த உத்தரவிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 11 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
