இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனத்தை பெற்றுக்கொள்ள மறுக்கும் எம்பி
2026 பாதீட்டின் திட்டத்தின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட கெப் ரக வாகனத்தை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கெப் ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளார்.
அதிகாரபூர்வ கடிதம்
தனது முடிவை மதிக்கும் பட்சத்தில், 1,774 கெப் ரக வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறும் விதான ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் மறுத்த போதிலும் 1,775 கெப் ரக வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்வது வரி செலுத்துவோருக்கு எதிரான கடுமையான அநீதி என்றும் ஜகத் விதான சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |