விசேட சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம்(15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 31 ஆயிரத்து 873 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 769 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 29 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது
அதேநேரம், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 322 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 153 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 17 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 31 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 528 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam