சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பெரிய காளை கோட்டை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று (16) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாரை கண்டு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, வாய்க்காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பரல்கள் கொண்ட 3400 லீற்றர் கோடாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
முற்றுகை
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வயல் பகுதியை அண்டிய வாய்க்காலில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது, வாய்க்கால் நீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாவுடனான 17 பரல்களை மீட்டு கோடாவை அங்கு ஊற்றி அழித்து பரல்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri