அமெரிக்காவில் அதிரடி கைது வேட்டையில் இறங்கிய அதிகாரிகள்..
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான, ட்ரம்பின் கடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வட கரோலினாவின் சார்லோட் நகரில் மத்திய முகவர்கள் சோதனை நடத்தியுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.
X இல் இட்டுள்ள ஒரு பதிவில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை உளவு அதிகாரி கிரிகோரி போவினோ, குறைந்தது 81 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இந்நிலையில், சார்லோட் மேயர் லி வைல்ஸ் உட்பட உள்ளூர் அதிகாரிகள், இந்த நடவடிக்கையை விமர்சித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகள்
மேலும், இது சமூகத்தில் "தேவையற்ற பயத்தையும் நிச்சயமற்ற தன்மையையும்" ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க வரலாற்றில் "மிகப்பெரிய நாடுகடத்தல் திட்டம்" என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்ற வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோவிற்கு துருப்புக்களை அனுப்பியுள்ளார்.
இது அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடுகடத்தும் திட்டத்தின் ஒரு முக்கிய நகர்வாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அந்நாட்டில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்காக இந்த அதிரடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan