அரசாங்கம் மக்களிடம் மறைக்கும் உண்மைகள்.. அம்பலமாகும் மர்மங்கள்!
அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இந்த காலகட்டத்தில், அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
நீடிக்கும் மர்மம்
ஆனால், குறித்த ஒப்பந்தங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை என்பதே பிரச்சினை ஆகும்.

கடந்த ஏப்ரல் 8 அன்று, இந்தியாவுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இன்றும் அந்த ஒப்பந்தங்கள் மர்மமாகவே உள்ளன.
இதேபோல், மறுநாள் ஜப்பானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டமையும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தங்களில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தாத நிலையில், அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு இராணுவ பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இப்போது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற அனைத்து நாடுகளுடனும் தனக்குத் தோன்றும்போது ஒப்பந்தங்களை செய்துகொள்கின்றது. இது ஜனநாயகம் அல்ல.
மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் கையெழுத்திடப்பட்ட துரோக ஒப்பந்தங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam